Fuel cell
எரியன் மின்கலம் (Fuel cell) இரசாயன ஆற்றலை நேரடியாக மின்னாற்றலாக மாற்றக்கூடிய ஒரு சாதனம் ஆகும்[1]. எரிபொருள் மின்கலன், எரிபொருள் மின்கலம், எரிபொருள் கலன், எரிபொருள் கலம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். மற்ற மின்கலங்களைப் போல இதிலும் நேர் மின்வாய் ஒன்றும் எதிர் மின்வாய் ஒன்றும் இவற்றுக்கிடையில் ஒரு மின்னாற்பகுபொருளும் இடம்பெற்றுள்ளன. ஐதரசன் மிகப்மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் எரிபொருள் ஆகும். ஆனால், சில நேரங்களில் இயற்கை வளிமம் (natural gas) போன்ற ஐட்ரோ கார்பன்களும் மெத்தனால் போன்ற ஆல்ககால்களும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருள் மின்கலன்கள் என்பவை சாதாரண மின்கலங்களிலிருந்து வேறுபட்டவை. எரிபொருள் மின்கலன்களுக்குத் தொடர்ச்சியாக ஆக்சிசனனும்/காற்றும் எரிபொருளும் இருக்க வேண்டும். இல்லையெனில் வேதிவினை நிகழாமல் போகக்கூடும். எனினும், இந்த மூலங்கள் இருக்கும் வரை தொடர்ந்து மின்னாற்றல் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும்.
நேரடி மெத்தனால் எரிபொருள் மின்கலத்தின் செய்முறை விளக்கம். படத்தின் நடுவிலுள்ள கனசதுர வடிவ ஏடுகளே எரிபொருள் மின்கல அடுக்கு ஆகும்.
Comments
Post a Comment